நவீன இந்தியாவில் பெளத்தத்தின் 70வது ஆண்டு மற்றும் உலக அமைதிக்கான பேரணி - பூர்வ பெளத்தர்கள் மாநாடு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிலாதம்மா பேரணியில் கலந்து கொண்டது. மேடையில் நிலாதம்மா சார்பாக தாரகை உரையாற்றினார்.
அன்னை ரமா பிறந்தநாள்
அசோக நகர் புத்த விகாரில் அன்னை ரமாமாய் அவர்களின் பிறந்த நாள் குறித்த உரையாடலும், கூட்டு தியானம் நடைபெற்றது...
சமத்துவ திருநாள்
சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் பிறந்த நாள் சமத்துவத் திருநாள் நிகழ்வாக அனுசரிக்கப்படுகிறது. நிகழ்வில் நிலாதம்மாவின் கலை நிகழ்ச்சி; உடன் சாவித்ரிபாய் ஆம்ஸ்ட்ராங்...
சஞ்சம் மிஸ்ரம்
நாங்க வச்ச பேரு நாக்பூர் காலா சேட்... செல்லமா ‘டான்’ன்னு கூப்டுவோம். ஜெய்பீம் என்ற ஒற்றை முழக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறவாகிப்போன நாக்பூர்காரர்.
நிலா தம்மா குடும்பத்தோடு நாக்பூர் தீக்சா பூமி பயணித்த போது எங்களுக்கு அறிமுகமாகி மூன்று வருடங்களாக அவரது வீட்டிற்கே நிலாதம்மா குடும்பத்தை விருந்தாளியாக அழைத்து உபசரித்தவர். ஒன்று இரண்டு பேரல்ல ஒவ்வொரு முறையும் 120 பேர்.
மொழி புரியாத இடத்தில் கூட சஞ்சய் மிஸ்ரம் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் அங்கே கிடைக்கிற உபசரிப்பும் மரியாதையும் இன்னும் இன்னும் சிறப்பாக அமைந்திருந்திருக்கிறது. காசு வாங்காமல் இலவசமாக இறக்கி விட்டு சென்ற ஆட்டோகாரரும், லட்டு பார்சல் பண்ணி குடுத்த பேக்கரிகாரரும் என்று எங்களிடம் சொல்ல அவ்வளவு நினைவுகள் இருக்கிறது.
நாக்பூர் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது இறுதிச்சடங்கில் நிலாதம்மா சார்பாக கலந்து கொண்டோம்.
2023ஆம் வருடம் மீண்டும் நாக்பூர் சென்று அவரது வீட்டின் அருகே திறக்கப்பட்டுள்ள சிலைக்கு நிலாதம்மா சார்பாக மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினோம்.
அவரது குடும்பத்தினர் தமிழகம் வரும் போதெல்லாம் நிலாதம்மா அவர்களுக்கு துணையாக உறவாக நிற்கிறது.
நீலவணக்கம் டான்... We miss you...


















