About / நம்மைப் பற்றி

நிலா தம்மா

நாங்கள் பௌத்தர்கள்.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் காட்டும் தம்மப்பாதையில் பயணிக்கிறோம்.

சமத்துவத்திற்கு மேலான ஆற்றல் இல்லை என்பதை அறிவோம்

கலைகளை சமத்துவக் கருவிகளாக்கி குழந்தைகள் நண்பர்கள் குடும்பங்கள் என இயங்கி வருகிறோம்.

பாபாசாகேப் அம்பேத்கர் இரவு பாடசாலைகள் நடத்தி வருகிறோம். 

பௌத்த பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கின்றோம்.

குறிப்பாக பௌத்த திருமணங்கள் பல நடத்தியிருக்கின்றோம்.

சமத்துவ தேடலில் பௌத்தத்தை பல வழிகளிலும் தேடியடைந்த அத்தனை நல்ல மனிதர்களுக்கும் நன்றி பாராட்டும் விதமாக 2012 முதல் எல்லா பௌர்ணமி தினங்களிலும் குடும்பமாகக் கூடி வருகிறோம். 

பௌத்தர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா?
பௌர்ணமி பௌத்தர்களுக்கானதா? 
பௌத்த பண்பாட்டு விழாக்கள் நடக்கிறதா? 
பௌத்தர்களாய் வாழ முடியுமா? இயங்க முடியுமா? வளர முடியுமா? 

இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு அமைதியாய் தொடர் வேலைகளால் பதில் சொல்லி வருகிறோம். 

பௌத்தம் ஏற்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்,  அரசிதழில் பதிவு செய்வது, சான்றிதழ்களைப் பெறுவது என்று ஒரு தொடர் நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான குடும்பங்களாக வலிமை பெற்றிருக்கிறோம்.

மறைக்கப்பட்ட சிதைக்கப்பட்ட பௌத்த அடையாளங்களை, பௌத்த வாழ்வியலை, வாழும் வாழ்க்கையிலிருந்தும் மிச்சமிருக்கும் அடையாளங்களிலிருந்தும் இழந்துபட்ட செல்வங்களில் இருந்தும்  மூத்த வழிகாட்டிகளிடமிருந்தும் பெறுகிறோம், மறுகட்டமைப்பு செய்கிறோம்.

கலைகள் சார்ந்த பயிற்சிகள், நாடகம், ஆடல், பாடல், இசை, நிகழ்த்துதல், தொழில்நுட்பம் என தொடர் பயிற்சிக்கான களமாக ஆகியிருக்கிறோம்.

அனைவரிடமும் சேர்ந்து செயலாற்றுதல் என்பதை நெறியாகக் கொண்டிருக்கிறோம்.

பௌத்தத்தை தமிழகத்தில் பேசுபொருளாக மாற்றியதில் பாடாற்றிய அத்தனை சொந்தங்களோடு நாங்களும் தோளோடு தோள் நிற்பதில் பெருமை கொள்கிறோம்.

பண்பாட்டு அறிதலும் செயலும் பயிற்சியும் பௌத்த வாழ்க்கை முறையும் தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் வளமாக்கி உயர்த்தும் என்பதை நேரில் கண்டு வருகிறோம்.


”ஏஹி பஸ்ஸிகோ” - வாருங்கள் வந்து கண்டுணருங்கள்…


***********

We're Buddhists.  

We tread on the Dhamma path, founded by the principles, "Liberty, Equality, and Fraternity".  

We strongly believe that there's nothing better than the equality.  

In association with kids, families, and friends, we made the arts as a tool of equality.

We've been successfully running "Babasaheb Ambedkar Nigth Schools" in various places.  Buddhist cultural events are organized by us, particularly Buddhist marriages. Many have embraced Buddhism, through the events we've organized.  Since 2012, we've been conducting Buddhist Full Moon Day celebrations as a family function in regular.

Art classes are offered by us regularly.  We've been closely associated with various organizations, which are all working towards the revival of Buddhism, in India as per Babasaheb Ambedkar's words.  We're succeeding in organizing Buddhist events as cultural events among the families.