பௌத்தமேற்ற பட்டியலினத்தினருக்கான சமூகச் சான்றிதழ் ( Community Certificate )
பௌத்தமேற்ற பட்டியலினத்தினருக்கு அவர்களின் சமூக உரிமையைப் பெரும் வகையில், பட்டியலினம் என்றே சமூகச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரு பட்டியலினத்தவர் இந்து, சீக்கிய & பௌத்த மதம் ஆகிய இந்த மூன்றில் எதற்கு மாறினாலும், பின்பற்றினாலும் அவரின் சமூக உரிமைகளைப் பெற பட்டியலினம் ( SC ) என்றே சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்தச் சான்றிதழ் பெறுவது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் இருப்பது ஒரு புறமென்றால், அரசு அதிகாரிகளும் இது குறித்த போதுமான விழிப்புணர்வு இன்றியோ, அல்லது வேண்டுமென்றோ சரியான முறையில் சான்றிதழ் அளிக்காமல் மக்களை அலைக்கழிக்கின்றனர்.
இது குறித்தே இந்தப் பதிவு.
பௌத்தமேற்ற பட்டியலினத்தினர், மற்றவர்கள் சமூகச் சான்றிதழ் பெறுவது போன்றே நாமும் இ-சேவை மையம் மூலமே விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
இ-சேவை மையத்தை அனுகும்போது, CAN registration அல்லது குடிமக்கள் கணக்கு எண் பதிவு செய்கையில், மதம் என்ற இடத்தில் Buddhist என்று தேர்வு செய்தால் போதும். மற்றபடி, பெற்றோரின் சமூகச் (ஜாதிச்) சான்றிதழைப் பொறுத்தோ, அல்லது விண்ணப்பதாரரின் பழைய சான்றிதழைப் பொருத்தோ சமூகச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பழைய சமூகச் சான்றிதழ்களில் மதம் குறிப்பிடப்பட்டு, அதன் பின்னர் உட்சாதி குறிப்பிடப்பட்டிருக்கும் ( உம்: இந்து - ஆதிதிராவிடர் ). ஆனால், சமீபத்தில் வழங்கப்படும் சமூகச் சான்றிதழ்களில் மதம் குறிப்பிடப்படுவதில்லை. உட்சாதியும் ( ஆதிதிராவிடர் ) சமூகமும் ( SC ) மட்டுமே குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment