பீஹாரின் விக்கிரமசீலா பல்கலையில் 42 ஆண்டுகளுக்குப் பின் அகழாய்வு


பீஹாரின் விக்கிரமசீலா பல்கலை


பாட்னா : பீஹாரின் பாஹல்பூர் மாவட்டத்தில், எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட,  கல்வி அளித்து வந்த விக்கிரமசீலா பல்கலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன.

எட்டாம் நுாற்றாண்டில் பாலப் பேரரசர் தர்மபாலாவால் கட்டப்பட்டது, விக்கிரமசீலா பல்கலைக்கழகம்.

நாளந்தா, ஓடாந்தபுரியைத் தொடர்ந்து, பல்துறைக்  கல்வி வழங்குவதற்காக, பேரரசர் தர்மபாலாவால் இந்த பல்கலை கட்டப்பட்டது.

பின்னர், 13ம் நுாற்றாண்டில் படையெடுப்பில் இது அழிக்கப்பட்டது. தற்போதைய பீஹாரின் பாஹல்பூர் மாவட்டம் அன்திசாக் கிராமத்தில் இந்தப் பல்கலை அமைந்திருந்தது. இது தொடர்பாக, 1972 முதல் 1982 வரை தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றில், பல்கலையின் பல முக்கிய கட்டடங்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பின், தற்போது மீண்டும் அங்கு அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன. கடந்த 8ம் தேதி இந்த பணிகள் துவங்கின.

ஏற்கனவே அகழாய்வு பணிகள் நடந்த இடங்களில் மணல்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வில், பல்கலை குறித்து பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பௌத்தம் : மதமா, தத்துவமா, அரசியலா ...,

 "அறியப்படாத அக்டோபர் புரட்சி" என்ற தலைப்பில் 17-அக்டோபர்-2023 அன்று தமிழ் இந்து நாளிதழில் சகோ. புனித பாண்டியன் அவர்களின் கட்டுரை வெளியாகியது.  ( https://bit.ly/October_Revolution )

அதனையொட்டி, சகோ. அ. கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தர் ஒரு எதிர்வினையை "அம்பேத்கர் கண்ட பௌத்த "மதம்" என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார். 

அந்த எதிர்வினைக்காக ஒரு பதிலையும் சகோ. புனித பாண்டியன் அவர்கள் பதிவு செய்திருந்தார்.



இந்த வாதங்களை ஒட்டி ஒரு கட்டுரையை "உள்ளதை உள்ளபடி பார்க்கப் பழகுவோம்" என்ற தலைப்பில் சகோ. ஜெயராணி அவர்கள் போதி முரசு இதழில் ஆசிரியர் பக்கக் கட்டுரை ஒன்றைப் பதிவுசெய்தார்.                                     

இந்த பதிவுகளின் தொகுப்பை வாசிக்க இந்த PDF document-டை download செய்யவும் : பௌத்தம் : மதமா, தத்துவமா, அரசியலா

பௌத்தர்களின் போர் நிறுத்தத்தை முன்னிறுத்திய ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்

பௌத்தர்கள் ஒன்று கூடி போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. 18-நவம்பர்-2023 காலை 9:00 மணிக்கு துவங்கிய உண்ணாநிலைப் போராட்டத்தில், நிலா தம்ம குழுவினர், தமிழக சிறுபான்மையினர் குழுவின் உறுப்பினரான பிக்கு மௌரிய புத்தா, சேலம் மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் : R. K. தேவேந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், பிரம்மபோதி விஹாரின் பிக்கு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் பிக்கு அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலைப்போராட்டத்தை முடித்து வைத்தார் 





புத்த பூர்ணிமாவை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

புத்த பூர்ணிமாவை விடுமுறை தினமாக அறிவிக்க தமிழ்நாட்டிலுள்ள பல பௌத்த சங்கங்கள், பல முயற்சிகள் எடுத்து வருகின்றன.  பல சங்கங்கள், இந்தக் கோரிக்கியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களிடம் வைத்தனர்.  நிலாதம்மா வைத்த கோரிக்கைகளையும் முதல்வர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்த கடிதத்தின் நகல் கிடைத்தது.


விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாண்டியராஜ் அவர்கள் இது குறித்து தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  அந்தவகையில் வழக்கை முன்னெடுத்த சகோதரர் அவர்களுக்கு அன்பும் மகிழ்ச்சியும்.




வரும் 4-ஏப்ரல்-2023, விடுமுறையாக அறிவித்து பள்ளிகளில் இருந்து தகவல் வந்தது.  அன்றைய தினம் மஹாவீர் ஜெயந்தியாகும்.  ஆக, தமிழக அளவில் பௌத்தர்களின் மக்கட்தொகை அளவே இருந்தாலும் ஜைனர்களின் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


பௌத்தர்களாகிய நாம் இதனை சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய தருணம் ஆகும்.  


இம்மண்ணினை பண்பாட்டு அடிப்படையில் செழிப்படையச் செய்த இரு சமயங்கள் சிரமண சமயங்களான பௌத்தமும் ஜைனமுமாகும்.


பாபாசாகேப் அவர்களின் முயற்சியைத் தொடர்ந்து இம்மண்ணில் பௌத்தம் மீட்சிபெறத் தொடங்கி, சமூக வலைத்தளங்கள் வருகையால் ஸ்திரப்பட்டு வருகிறது.  தற்போதைய நம்முடைய தேவையாக, ஆங்காங்கு இயங்கி வரும் பௌத்த சங்கங்கள், ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தோடாவது ஒன்றிணைந்து இயங்கவேண்டிய காலகட்டத்தில் நாமுள்ளோம்.


ஒவ்வொரு பௌத்த சங்கமும் அவர்கள் இயங்கும் பகுதி சார்ந்த பிரச்சினைகள், சவால்கள் குறித்து இயங்கவும், குறைந்த பட்ச செயல்திட்டத்தோடு தமிழக அளவில் மற்ற சங்கங்களோடு இணைவது நம்மை வலுவாக்கவும், நமக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் வழிவகுக்கும்.

 

Buddhist group meets minorities board member

 Further to the meeting our team had with the Minority Commission member Ven Bikku Mouriyar Buddha, media coverage has been published.



Thanks to our media friend.