Showing posts with label buddhism buddhist buddha ashoka stop the war israel palestine. Show all posts
Showing posts with label buddhism buddhist buddha ashoka stop the war israel palestine. Show all posts

பௌத்தர்களின் போர் நிறுத்தத்தை முன்னிறுத்திய ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்

பௌத்தர்கள் ஒன்று கூடி போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. 18-நவம்பர்-2023 காலை 9:00 மணிக்கு துவங்கிய உண்ணாநிலைப் போராட்டத்தில், நிலா தம்ம குழுவினர், தமிழக சிறுபான்மையினர் குழுவின் உறுப்பினரான பிக்கு மௌரிய புத்தா, சேலம் மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் : R. K. தேவேந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்டோர் நலக்குழு உறுப்பினர், பிரம்மபோதி விஹாரின் பிக்கு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணியளவில் பிக்கு அவர்கள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலைப்போராட்டத்தை முடித்து வைத்தார்