பௌத்தக் கொடி நாள்

 ஜனவரி_08 - பௌத்தகொடிநாள்



ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை பௌத்த சிந்தனையாளர் கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக  தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.

 பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.

1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் உலக பௌத்தர்கள் அமைப்பு (World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன   மாலசேகரா அவர்கள்பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.

1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக்  குறிக்கிறது.

2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம)  வாழ்க்கையைக் குறிக்கிறது.

 3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக்   குறிக்கிறது.

 4.வெண்மை நிறம் - மாசற்ற  தம்மத்தைக் குறிக்கிறது.

5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.

 ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.

கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.


மார்கழியில் மக்களிசையில் அம்பேத்கரிய வினா விடைப் போட்டி!

மார்கழியில் மக்களிசை நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு ஒரு வினாவிடை நிகழ்வை நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.  அதன் அடிப்படையில் 20 கேள்விகளை பண்டிதர் அயோத்திதாசர் முதல் பாபாசாகேப்பின் பௌத்தமேற்பு வரை, தொகுத்து, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் online மூலம், பதிலளிக்கும் படியும், பதிலளித்தவர்கள், தங்களின் விடைகளையும், சரியான விடைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த வினா விடையை வடிவமைத்தோம்.  இந்தக் கேள்விகளில் சில, பட்டியலின மக்களின் வரலாற்றில் உள்ள திரிபுகளை நேர் செய்யும் வகையிலும் தேர்வுசெய்யப்பட்டது.

இந்த வினா விடைப் போட்டியில், நிகழ்விற்கு வந்திருந்த பலரும், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  குழுவாக நண்பர்களோடு வந்தவர்களில் ஒரு சிலர் தங்களுக்குள் ஒரு போட்டியாக பாவித்துக்கொண்டும், மற்றும் சிலர், சேர்ந்து விவாதித்தும் பதிலளித்தனர்.  

இந்தப் போட்டியில் 20 வினாக்களுக்கும் சரியான பதிலளித்தவர்களை அழைத்து பரிசளிக்கப்பட்டது.  இரு சகோதரிகளுக்கு நிலா தம்மாவின் அனுசுயா அவர்களும், மற்றவர்களுக்கு பேராசிரியர். ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் பரிசுகளை வழங்கினர்!








இந்த வினா விடையை நீங்களும் முயற்சி செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைச் சொடுக்கி கலந்து கொள்ளலாம்.  

தமிழில் >> https://bit.ly/ta-quiz

ஆங்கிலத்தில் >> https://bit.ly/en-quiz



திருச்சியில் பெளத்தமேற்பு மற்றும் காதணிவிழா

 திருச்சியில் அஜய் ரோஷிணி இணையரின் குழந்தைக்கு மொட்டை அடித்து, காதணி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமல்தாஸ் குடும்பத்தினர் பெளத்தமேற்றனர். நிகழ்வு முடிந்து போதி விகாருக்கு சென்று புத்த பூஜை செய்து திரும்பினோம்.

பெளத்தமேற்பு


அஜய் ரோஷிணி இல்லம்

போதி விகார்



மார்கழியில் மக்களிசையில் நிலாதம்மா ஸ்டால்

 சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை நிகழ்வில் நிலாதம்மா சார்பாக ஸ்டால் போடப்பட்டிருந்தது. நிகழ்விற்கு வருகை புரிந்தவர்களுக்கு குறைவான விலையில் எளிய பாரம்பரிய உணவு விற்பனை செய்தோம். மேலும், பாபாசாகேப், புத்தர் படங்கள், கீசெயின், கப், பேனா போன்ற பொருட்களை விற்பனை செய்தோம். 

நிலாதம்மா குழந்தைகள் வண்ணங்களைக் கொண்டு முக ஓவியங்கள் வரைந்தார்கள். வருகை புரிந்தவர்களுக்கு பெளத்தம் குறித்தும், பாபாசாகேப் குறித்தும் அறிந்து கொள்ளும் விதமாக விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.









கோரேகான் நினைவு தினம்

 

புத்தாண்டை முன்னிட்டும், கோரேகான் நினைவு தினத்தை முன்னிட்டும் பல்லாவரம் புத்தவிகாரில் நிலா தம்மா கூடுகை நடத்தி சிறப்பித்தனர்.