ராவ் பகதூர் M. C. ராஜாவும் "இந்து" அடையாளமும்!

 ராவ் பகதூர் M. C. ராஜா மீது தமிழகத்தில் ஒரு வெறுப்பரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பட்டியலின ஆளுமையும் ஈவெரா பெரியார் அவர்களின் காலத்தில் இல்லை என்று நிறுவ செய்யப்பட்ட & செய்யப்படுகின்ற பிரச்சாரம், என்றால் மிகையல்ல.

ராவ் பகதூர் M. C. ராஜா அவர்களின் மீது வைக்கப்படும் வாதங்களில் முக்கியமான ஒன்று, பூனா ஒப்பந்தத்தின் போது, அவர் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கருக்கு எதிராக நின்றார் என்பதே.
ஆனால், பின்னாளில், அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாபாசாகேப்போடு பயணித்தார்.
கீழ்க்காணும் காணொளி, அவரின் கருத்தாகும்.
"இந்து கோவில்களுக்குள் நுழைய நமக்கு சுதந்திரம் இல்லையென்றால், நாம் இந்துக்கள் அல்ல, நாம் இந்துக்கள் இல்லையென்றால், ஏன் அவர்களுடன் கூட்டு வாக்காளர் தொகுதியில் சேர வேண்டும்?" என்கிறார். இது 1938ல் ராவ் பகதூர் M. C. ராஜா அவர்கள் செய்த பதிவு.




பாபாசாகேப் நினைவு நாள்

 பாபாசாகேப் நினைவு நாளில் மணிமண்டபத்தில்...

சங்கமித்திரை தேரி இலங்கையை அடைந்த பௌர்ணமி தினம்

பௌத்தப்பேரரசர் மாமன்னர் அசோகர் அவர்களின் மகளும், பிக்குணியுமான அரஹந்தர் சங்கமித்திரை தேரி பதினோரு பிக்குணிகளோடு, மஹா போதியின் பதியனிடப்பட்ட ஒரு கிளையுடனும் இன்றைய காலகட்டத்தில், டிசம்பர் மாத பௌர்ணமி தினத்தில், இலங்கையை வந்தடைய, அவரை, மாமன்னர் தேவநாம்பிய திஸ்ஸா அவர்கள், கடலில் இறங்கி கரம் கூப்பி வரவேற்றார்.  




பௌத்தப்பேரரசர் மாமன்னர் அசோகர் அவர்களின் மகனும் அரஹந்தருமான மஹேந்திர தேரர் மூலம் இலங்கையில் தம்மம் போதிக்கப்பட, அதனைத் தொடர்ந்து மஹாராணி அனுலா அவர்களைக் கொண்டு பிக்குணி சங்கத்தை நிறுவினார்.  இலங்கையின் முதல் பிக்குணியக மஹாராணி அனுலா அறியப்படுகிறார்.

சங்கமித்திரை தேரி கொண்டு வந்த மஹாபோதியின் கிளையை அனுராதபுரத்தில் நட்டனர். அந்த மஹா போதி இன்றளவும் செழித்து வளர்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, உலக அளவில், மனித முயற்சியால் நடப்பட்ட மிகப்பழமையான மரம் என்ற பெருமையை பெருகிறது, இங்கு நடப்பட்ட மஹா போதி.


தம்மபயிற்சி முகாம்!

 "புத்தர் ஒரு மார்க்கதத்தர்" என்கிறார் பாபாசாகேப் Dr. B. R. அம்பேத்கர்.


பௌத்தம் என்பது அறிவொளி அடைவதை முன்னிறுத்துகிறது.

ஒரு பௌத்தரின் தார்மீகக் கடமை அறிவொளி அடைவதே. அதுவே புத்தர் போதித்தது.

அந்த வகையில், பௌத்ததம்மத்தைப் பயிற்சி செய்ய, தம்ம வகுப்பினை தம்மச்சாரி கௌதம் பிரபு அவர்கள் நமது நிலா தம்மா குடும்பத்தினருக்கு 30 - செப்டம்பர் மற்றும் 1 & 2 அக்டோபர் ஆகிய தேதிகளில் தம்ம பயிற்சி அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நவம்பர் 1 & 2 ஆகிய தேதிகளில் தம்ம பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில், அனா பானா சதி பயிற்சி, தியானத்திற்கு தடையாக இருக்கும் ஐந்து விஷயங்கள், அவைகளை எவ்வாறு கடப்பது, தியானப் பயிற்சியில் செழிக்க தியானக் கையேட்டை எவ்வாறு பயன்படுத்துவது, "குலம்" ஆக இணைந்து தம்ம பயிற்சியை மேற்கொள்வது, ஒரு பௌத்தரின் தார்மீகக் கடமைகள், மேலும் பல விஷயங்கள் தம்மச்சாரி கௌதம் பிரபு அவர்களால் போதிக்கப்பட்டது.

எங்களை தம்மத்தில் செழிக்க வழிகாட்டும் தம்மச்சாரி கௌதம் பிரபு அண்ணா அவர்களுக்கு அன்பும், நன்றிகளும்!