பௌத்தப்பேரரசர் மாமன்னர் அசோகர் அவர்களின் மகளும், பிக்குணியுமான அரஹந்தர் சங்கமித்திரை தேரி பதினோரு பிக்குணிகளோடு, மஹா போதியின் பதியனிடப்பட்ட ஒரு கிளையுடனும் இன்றைய காலகட்டத்தில், டிசம்பர் மாத பௌர்ணமி தினத்தில், இலங்கையை வந்தடைய, அவரை, மாமன்னர் தேவநாம்பிய திஸ்ஸா அவர்கள், கடலில் இறங்கி கரம் கூப்பி வரவேற்றார்.
பௌத்தப்பேரரசர் மாமன்னர் அசோகர் அவர்களின் மகனும் அரஹந்தருமான மஹேந்திர தேரர் மூலம் இலங்கையில் தம்மம் போதிக்கப்பட, அதனைத் தொடர்ந்து மஹாராணி அனுலா அவர்களைக் கொண்டு பிக்குணி சங்கத்தை நிறுவினார். இலங்கையின் முதல் பிக்குணியக மஹாராணி அனுலா அறியப்படுகிறார்.
சங்கமித்திரை தேரி கொண்டு வந்த மஹாபோதியின் கிளையை அனுராதபுரத்தில் நட்டனர். அந்த மஹா போதி இன்றளவும் செழித்து வளர்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, உலக அளவில், மனித முயற்சியால் நடப்பட்ட மிகப்பழமையான மரம் என்ற பெருமையை பெருகிறது, இங்கு நடப்பட்ட மஹா போதி.























