Showing posts with label March Full Moon. Show all posts
Showing posts with label March Full Moon. Show all posts

பங்குனித் திங்கள் பௌர்ணமி ( March )

பூரண ஞானம் பெற்ற கௌதம புத்தர் முதன்முதலாக இராஜகிருகத்திலிருந்து கபிலவஸ்துவுக்கு இன்றைய பௌர்ணமியில் புறப்படுதல்.


சுத்தோதனர் அனுப்பிய தூதுவர்கள் கௌதம புத்தரை அணுகுதல்

கௌதம புத்தர் இராஜகிருகத்தில் வசித்து வரும் சமயம் மென்மையான தம்ம போதனை செய்த செய்தி மாமன்னர் சுத்தோதனர் காதில் எட்டியதும் பூரண ஞானம் பொலிந்த மகாஞானியாகிய மகனை காண ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது.  இதன் விளைவாக அவர் தொடர்ந்து 9 தடவைகள் 9 அரசவையினர் மூலம் கௌதம புத்தருக்கு தூதுவர்களாக கபிலவஸ்து வரும்படி வேண்டினார்.  எதிர்பார்த்த செய்திக்கு முரண்பாடாக அவர்கள் அனைவரும் தர்மம் கேட்டு அறவோர் நிலையைடைந்து சங்கத்தில் சேர்ந்தனர்.  அப்பொழுதில் இருந்து அறவோர்கள் இவ்வுலக வாழ்வுக்குரிய பொருட்களிடத்து கவலையற்றவர்களாக மாறி தூது குறிப்பினை அறிவிக்கவில்லை.

ஏமாற்றமடைந்த மாமன்னர் இறுதிக் கட்டமாக மற்றுமொரு அரசவையினரும் கௌதம புத்தரின் ஆர்வமிக்க விளையாட்டு தோழருமான க்லுதாயி ( கால உதயணன் ) என்பவரை முழு நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.  அவரும் சங்கத்தில் சேர மாமன்னரின் அனுமதி பெற்றதன் பொருட்டு தன்னுடைய சம்மதம் தெரிவித்து விடைபெற்றுச் சென்றார்.  மற்றவர்கள் போல் தானும் நல்வாய்ப்பாகச் சங்கத்தில் சேர்ந்து அறவோர் நிலையடையலாமா? என்று சிந்தித்தார்.  ஆனால், மற்றவர்கள் போல அல்லாமல் இவர் தான் கொண்டு வந்த செய்தியினை கௌதம புத்தரிடம் தெரிவித்து  அரச குடும்பத்தைச் சார்ந்த முதிர்ந்த தந்தையிடம் செல்லுமாறு அறிவுறுத்தி இணங்க வைத்தார்.  

கௌதம புத்தரின் கபிலவத்து நோக்கிய பயணம்
பருவ காலம் ஏற்றமையினால் கௌதம புத்தர் தன்னுடைய பரந்த பரிவாரங்கள் கொண்ட சீடர்களாகிய அரகந்த்களுடன் இன்றைய பௌர்ணமி நாளில் தொலைதூரப் பயணம் கால்நடையாகத் தொடங்கினார்.  தொலைப்பயணம் தொடங்கி வரும் வழியில் பாமர மக்கள், பிரபுக்கள் கோடீஸ்வரர்களும் வேறுபாடு அல்லாமல் மக்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் மொழியில் தம்மம் போதித்து வரலானார்.