Showing posts with label Buddha. Show all posts
Showing posts with label Buddha. Show all posts

பௌத்தம் திரும்பிய பட்டியலினமக்கள், "பட்டியலின இந்து"க்களை விட சிறந்த கல்வியறிவு, பாலின சமத்துவத்தை அனுபவிக்கிறார்கள்

இந்தியாவில் 8.4 மில்லியனுக்கும் அதிகமான பௌத்தர்கள் உள்ளனர், அவர்களில் 87% பேர் மற்ற மதங்களிலிருந்து பௌத்தம் திரும்பியவர்கள். பெரும்பாலும் இந்து சாதி ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க மதத்தை மாற்றிய பட்டியலின மக்கள். மீதமுள்ள 13% பௌத்ததர்கள் வடகிழக்கு மற்றும் வடக்கு இமயமலைப் பகுதிகளின் பாரம்பரிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 

இன்று, பௌத்த மதத்திற்கு திரும்பியவர்களை "புதிய பௌத்தர்கள்" என்றும் அழைக்கின்றனர் 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் இந்தியாஸ்பென்ட் பகுப்பாய்வின்படி, பௌத்தம் திரும்பிய பட்டியலினத்தவர்கள் "இந்து"க்களாக நீடிக்கும் பட்டியலினத்தினரைவிட சிறந்த கல்வியறிவு, அதிக வேலை வாய்ப்பு, பங்கேற்பு மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை அனுபவிக்கின்றனர் என்று தெளிவாகியுள்ளது.
இந்தியாவில் பௌத்தர்களின் மக்கள் தொகையில் 87% மக்கள், வேறு மதங்களில் இருந்து பௌத்தம் திரும்பியவர்கள். அவர்களில் பெரும்பாலோர் பட்டியலின மக்கள் என்பதால், சமூகத்தின் வளர்ச்சியின் நன்மைகள் பெரும்பாலும் பட்டியலினமக்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன என்ற அனுமானத்துடன் அந்தப் பகுப்பாய்வுச் செல்கிறது. 

 மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, பௌத்தர்களின் கல்வியறிவு விகிதம் 81.29% ஆகும், இது தேசிய சராசரியான 72.98% ஐ விட அதிகமாகும். இந்துக்களிடையே கல்வியறிவு விகிதம் 73.27% ஆகவும், பட்டியல் சாதியினர் 66.07% கல்வியறிவு விகிதத்திலும் குறைவாக உள்ளனர். 

"நிர்வாகத்தின் மூத்த மட்டங்களில் உள்ள பெரும்பாலான தலித்துகள் பௌத்தர்கள்" என்று பீம் இராணுவத்தின் தலைவரான சத்பால் தன்வார் பதிவு செய்கிறார்.இப்போது பட்டியலினமக்களைப் பெருமளவில் பௌத்தமதத்திற்கு மாறத் தூண்டுகிறது அந்த அமைப்பு. "ஏனென்றால், சாதி அமைப்போடு ஒப்பிடும்போது பௌத்தம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது, இது மோசமான கர்மா போன்ற தெளிவற்ற கருத்துகளின் காரணமாக அவர்களின் மீது சுமத்தப்பட்ட இழிவுகளைத் துடைத்தெறிந்து சுயசிந்தனை உடைய மக்களாக வாழ வழி செய்கின்றது" என்கிறார் அவர். 

சிறந்த கல்வியறிவு விகிதங்கள் 

 வடகிழக்கின் பாரம்பரிய சமூகங்களில், குறிப்பாக மிசோரம் (48.11%) மற்றும் அருணாச்சல பிரதேசம் (57.89%) ஆகியவற்றில் மட்டுமே, பௌத்ததர்கள் மக்கள்தொகை சராசரியை விட குறைந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளனர். 

மறுபுறம், சத்தீஸ்கர் (87.34%), மகாராஷ்டிரா (83.17%), ஜார்கண்ட் (80.41%) ஆகியவை அதிக எண்ணிக்கையிலான கல்வியறிவுள்ள பௌத்தர்களைக் கொண்டுள்ளன. மதமாற்றம் இயக்கம் மகாராஷ்டிராவில் வலுவாக உள்ளது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவையும் அதன் தாக்கத்தைக் கொண்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் கதை தனித்துவமானது, ஏனென்றால் மற்ற இந்திய மாநிலங்களை விட அதன் மக்கள்தொகையில் மிக அதிகமான விகிதத்தில் (5.81%) 6.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பௌத்தர்களாக உள்ளனர் - . 1956ல் இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவரான பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்,1956 இல் 600,000 தொண்டர்களுடன் பௌத்தம் திரும்பினார். சாதிவாதத்திற்கு எதிரான இந்த எதிர்ப்பு எதிர்ப்பு இன்றும் தொடர்கிறது,


உத்தரபிரதேசத்தில், 68.59% பௌத்தர்கள் கல்வியறிவு பெற்றவர்கள், மொத்த மக்கள் தொகை சராசரியை விட (67.68%) அதிகமாகவும், மற்ற பட்டியல் சாதியினரின் (60.88%) எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட எட்டு சதவீத புள்ளிகள் அதிகமாகவும் உள்ளனர். 

சிறந்த பாலின விகிதங்கள் 

இந்தியாவில் பௌத்தர்களிடையே பெண் கல்வியறிவு மொத்த மக்கள் தொகை சராசரியை விட (64.63%) கணிசமாக (74.04%) அதிகமாக உள்ளது என்று தரவு காட்டுகிறது. இந்த வகையில் உத்தரப்பிரதேசம் (57.07%) மற்றும் கர்நாடகா (64.21%) மட்டுமே பெண் கல்வியறிவு விகிதங்கள் மொத்த மக்கள் தொகை சராசரியை விடக் குறைவாகக் காட்டுகின்றன, ஆனால் இவை இன்னும் இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள பட்டியல் சாதியினரை விட கணிசமாக உயர்ந்தவை. 

2011 ஆம் ஆண்டின் தரவுகளின் படி, பௌத்தர்களிடையே பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 965 பெண்கள் ஆகும், மொத்த பட்டியல் சாதியினருக்கு 945 ஆக இருந்தது. தேசிய சராசரி பாலின விகிதம் 943. மேலும் பௌத்தர்கள் குடும்பக் கட்டுப்பாடுகளில் அக்கறை உள்ளவர்களாக உள்ளனர். 

பௌத்தர்களிடையே 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீதம் 11.62% ஆக உள்ளது தேசிய சராசரிவீதம் 13.59% ஆகும். 

இதன் பொருள், ஒவ்வொரு நூறு மக்களுக்கும், பௌத்தர்களுக்கு சராசரியை விட இரண்டு குழந்தைகள் குறைவாக உள்ளனர். 

மொத்த மக்கள்தொகை சராசரியான 31% உடன் ஒப்பிடும்போது சுமார் 43% பௌத்தர்கள் நகர்ப்புறங்களில் தங்கியிருக்கிறார்கள், இது அவர்களின் கல்வி வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. 

சுமார் 80% பௌத்தர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள், இது தேசிய சராசரியை விட சிறந்த கல்வியறிவு மற்றும் நகர்ப்புற விகிதத்தைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவுக்குள், பௌத்தர்களிடையே கல்வியறிவு விகிதம், நகரமயமாக்கல் நிலைகள் மற்றும் குழந்தை விகிதம் மற்ற குழுக்களை விட சற்றே சிறந்தது.

பௌத்தம் என்றால் என்ன?




"பௌத்தம், புத்தம், புத்தர்" என்ற சொற்கள் "புத்தி" எனும் சொல்லிலிருந்து வந்தவை.  பௌத்தம் என்பதன் பொருள் "விழிப்புடனிருத்தல்" எனலாம்.இந்த தத்துவம் சித்தார்த்த கௌதமர் என்று அழைக்கப்பட்ட ஒரு தனி மனிதன், தனது சொந்த முயற்சியாலும், அனுபவத்தாலும் கண்டுபிடிக்கப்பட்ட வழியாகும்.  அந்தச் சித்தார்தக் கௌதமர் எனும் புத்தரே, தனது 35வது வயதில் தான் இந்த பேரறிவாகிய "புத்த நிலை" எனும் விழிப்பு நிலையை அடைந்தார்.  பௌத்தம் கிட்டத்தட்ட 2500 ஆண்டு கடந்த ஒரு தத்துவமாகும். இச்சமயத்தைப் பின்பற்றும் மக்கள் உலகம் முழுவதும் 495 மில்லியன்கள் உள்ளனர்.  நூறாண்டுகளுக்கு முன்புவரை, ஆசிய மக்களால் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இந்தத் தத்துவம் இன்று ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்க மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுவருகிறது.  உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸடீன் முதல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் வரை புகழப்பட்ட மதமாக அது விளங்குகின்றது.

பங்குனித் திங்கள் பௌர்ணமி ( March )

பூரண ஞானம் பெற்ற கௌதம புத்தர் முதன்முதலாக இராஜகிருகத்திலிருந்து கபிலவஸ்துவுக்கு இன்றைய பௌர்ணமியில் புறப்படுதல்.


சுத்தோதனர் அனுப்பிய தூதுவர்கள் கௌதம புத்தரை அணுகுதல்

கௌதம புத்தர் இராஜகிருகத்தில் வசித்து வரும் சமயம் மென்மையான தம்ம போதனை செய்த செய்தி மாமன்னர் சுத்தோதனர் காதில் எட்டியதும் பூரண ஞானம் பொலிந்த மகாஞானியாகிய மகனை காண ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது.  இதன் விளைவாக அவர் தொடர்ந்து 9 தடவைகள் 9 அரசவையினர் மூலம் கௌதம புத்தருக்கு தூதுவர்களாக கபிலவஸ்து வரும்படி வேண்டினார்.  எதிர்பார்த்த செய்திக்கு முரண்பாடாக அவர்கள் அனைவரும் தர்மம் கேட்டு அறவோர் நிலையைடைந்து சங்கத்தில் சேர்ந்தனர்.  அப்பொழுதில் இருந்து அறவோர்கள் இவ்வுலக வாழ்வுக்குரிய பொருட்களிடத்து கவலையற்றவர்களாக மாறி தூது குறிப்பினை அறிவிக்கவில்லை.

ஏமாற்றமடைந்த மாமன்னர் இறுதிக் கட்டமாக மற்றுமொரு அரசவையினரும் கௌதம புத்தரின் ஆர்வமிக்க விளையாட்டு தோழருமான க்லுதாயி ( கால உதயணன் ) என்பவரை முழு நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார்.  அவரும் சங்கத்தில் சேர மாமன்னரின் அனுமதி பெற்றதன் பொருட்டு தன்னுடைய சம்மதம் தெரிவித்து விடைபெற்றுச் சென்றார்.  மற்றவர்கள் போல் தானும் நல்வாய்ப்பாகச் சங்கத்தில் சேர்ந்து அறவோர் நிலையடையலாமா? என்று சிந்தித்தார்.  ஆனால், மற்றவர்கள் போல அல்லாமல் இவர் தான் கொண்டு வந்த செய்தியினை கௌதம புத்தரிடம் தெரிவித்து  அரச குடும்பத்தைச் சார்ந்த முதிர்ந்த தந்தையிடம் செல்லுமாறு அறிவுறுத்தி இணங்க வைத்தார்.  

கௌதம புத்தரின் கபிலவத்து நோக்கிய பயணம்
பருவ காலம் ஏற்றமையினால் கௌதம புத்தர் தன்னுடைய பரந்த பரிவாரங்கள் கொண்ட சீடர்களாகிய அரகந்த்களுடன் இன்றைய பௌர்ணமி நாளில் தொலைதூரப் பயணம் கால்நடையாகத் தொடங்கினார்.  தொலைப்பயணம் தொடங்கி வரும் வழியில் பாமர மக்கள், பிரபுக்கள் கோடீஸ்வரர்களும் வேறுபாடு அல்லாமல் மக்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் மொழியில் தம்மம் போதித்து வரலானார்.