இலங்கை பிக்கு

 

இலங்கையிலிருந்து மரியாதைக்குரிய பெளத்த அறவணடிகள் Bhante Rohanakiththi தமிழகம் வருகை புரிந்தார். அவருடன் நிலாதம்மா உபாசகர், உபாசகிகள் நேரில் சந்திப்பு கூடுகை நடத்தினர்.  பல்லாவரம் பல்லவமலை புத்தவிஹாரில் புத்தவந்தனம் மற்றும் தம்ம பேருரை நிகழ்வு நடைபெற்றது.








பெளத்த மகாமங்கள திருமணம்

 பல்லவமலை புத்த விகாரில் ஸ்ரீநிதி - திலீபன் பெளத்த மகாமங்கள இணையேற்பு நடைபெற்றது. நிலாதம்மா முன்னின்று இந்த திருமணத்தை நடத்தினார்கள்.




173வது தொடர் பெளர்ணமி

 173வது தொடர் பெளர்ணமி அசோக் நகர் புத்த விகாரில் நடைபெற்றது.


















பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா!

 ‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா சென்னை நீலம் புக் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாரகை தொகுத்து வழங்கினார். நிலாதம்மாவின் குழந்தைகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 💙🎈







172-வது தொடர் பெளர்ணமி (01-பிப்ரவரி-2026)


நிலாதம்மாவின் 172-வது தொடர் பெளர்ணமி அசோக் நகரில் உள்ள புத்த விஹாரில் பிப்ரவரி 01 ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற பெளர்ணமியை நிலாதம்மாவின் உறுப்பினர் ஒருவர் முன்னின்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்த மாதம் உபாசகி பிரியா முன்னின்று தொகுத்து வழங்கி நடத்தினர்.

புத்தபூஜையுடன் நிகழ்வானது தொடங்கியது. புதிதாக வந்திருப்பவர்களுக்கு நிலாதம்மாவின் பயணம் பற்றி உபாசகி கோகிலா விளக்கினார். இந்த மாத பௌர்ணமிக்கு வருகை தந்த  சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் உபாசகி அனுஷியா.

இந்த மாத பெளர்ணமிக்கு புலியந்தோப்பு மக்களிடையே வேலை செய்துவரும் கள செயற்பாட்டாளர் ராஜலக்ஷ்மி  MSW படித்தவர் (Don Bosco ,social service, program manager ஆக வேலை செய்பவர்)சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது “நிலாதம்மாவின் நாக்பூர் தீக்சாபூமி பயணம் தான் எனக்கு மிகப்பெரிய அம்பேத்கரிய பார்வையை ஏற்படுத்தியது என்று கூறினார்.

பெளர்ணமி நிகழ்விற்கு வருகைபுரிந்தவர்களை வரவேற்ற பிறகு இந்த பெளர்ணமி நிகழ்விற்கு புதிதாக வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.

கரும்பிடாரி கலைக்குழு பறையிசைத்து அம்பேத்கரிய பெளத்த பண்பாட்டு பாடல்களையும், நாடகங்களையும் நிகழ்த்திக்காட்டினர்.

புதிதாக வந்திருந்த பல்வேறு நபர்கள் தங்களுக்கு இந்த பெளர்ணமி குறித்த புரிதலை நிலாதம்மா தான் வழங்கியது. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிகழ்விற்கு வருகை புரிவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார்கள்.

அனைவருக்கும் இரவு உணவு தானம்  வழங்கப்பட்டது.