Why Buddhists Chant?



Dhammamitra Gauthama Prabhu N
ஏன் பௌத்தர்கள் பாராயணம் அல்லது துதி பாடுதல் செய்கிறார்கள்?
பௌத்த பாராயணம் மற்ற மத பாராயணம் அல்லது துதி பாடுதல் மந்திரங்களைப் போல அல்ல. இது கடவுளைப் புகழ்ந்து பாடும் பஜனை அல்லது ஸ்லோகங்களைப் போன்றது அல்ல, மூடநம்பிக்கைகள் அல்லது கண்மூடித்தனமாகப் பாடுவது அல்லது கைதட்டல் மற்றும் நடனம் ஆடுவது அல்லது இசைக்கருவிகளுடன் கூடியது அல்ல. இது ஒரு வருத்தமான செயல் அல்லது பிரார்த்தனை அல்ல. இது ஒரு மதக் கடமை அல்ல. இது மந்திர சக்திகள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெறுவதற்காக செய்யப்படுவதில்லை. இது கடவுளிடமிருந்து அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியிலிருந்து நன்மைகளைப் பெறுவதற்காக அல்ல. இது உங்கள் அறிவையும் திறமையையும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்ல.
பௌத்த பாராயணம் என்பது மனதை அமைதிப்படுத்தவும், மனத்தை ஒருமுகப்படுத்துதல் செய்வதர்த்துக்கு, ஆன்மீக ஆற்றல் உருவாக்கவும், நேர்மறை உணர்ச்சிகளைத் தூண்டவும், நம்பிக்கையை வழங்கவும், தைரியத்தை வளர்க்கவும், நமது அஹங்காரத்தை மற்றும் அகந்தை வெல்லவும், நம் வாழ்க்கையில் ஆன்மீக ஒழுக்கத்தை வளர்க்கவும் பயிற்சி செய்யப்படும் ஒரு மரியாதைக்குரிய செயலாகும். புத்தர் காலத்தில், பரித்த (பாதுகாப்பு), ஓவாத (ஆலோசனை), உதான (ஊக்கமளிக்கும்), சஜ்ஜாய (மனப்பாடம்) போன்ற பௌத்த பாராயணம் நடைமுறையில் இருந்தன. இது நமது மனதை உயர்ந்த உணர்வு நிலைக்கு மாற்றுவதற்கான முற்றிலும் உளவியல் மற்றும் ஆன்மீக செயலாகும். சாது சாது சாது!



மெட்டாவுடன்,
தம்மமித்ர கௌதம பிரபு என்
No comments:
Post a Comment